October 26, 2017
என் கதைகள் அனைத்தும் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன. 

சில அழியாச்சுடர்களிலும் சில வெவ்வேறு தளங்களிலும் அனைத்தும் PDFஆக என் பிளாகில் நானே வெளியிட்டும் எல்லா கதைகளும் archive.org http://bit.ly/2zGi9ch சேமிப்பு கிடங்கில் இலவசமாகவும் இணையத்தில் கிடைக்கின்றன. 
நான் அதிகம் எழுதியவனும் இல்லை. அதிகம் பிரபலமானவனும் இல்லை. கும்பல் சேர்ப்பவனும் இல்லை. ஆனால் என் புத்தகங்கள் இபுக்காக வெளியானதும் இந்த அல்சேஷனையும் விலை கொடுத்து வாங்க ஆளிருப்பது எப்படி என்றுதான் புரியவில்லை. 
எல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதை இப்படிக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால், இதற்கு அன்பைத் தவிர வேறு எதைத்தான் காரணமாகச் சொல்வது. மிக்க நன்றி.