October 22, 2017
நேற்று மாலை நண்பனின் மகளுக்கு பேலியோ பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதைத் தள்ளி நின்று கேட்டுக்கொண்டும் இருந்த எனக்குத் தோன்றியது அட பரவாயில்லையே என்று. 

இன்று பேலியோ பற்றி நீங்கள் எழுதுங்களேன் என்றார் இன்னொரு நண்பர். 
சற்று முன் டிவியில் இருக்கும் என் பழைய நண்பர் பேலியோ பற்றி என்னிடம் கேட்டு ஒரு நிகழ்ச்சி தயாரிக்கும்படி கூறியதாக ஒரு பெண் நிருபர் கைபேசியில் தொடர்புகொண்டார். 
அலுவல் ரீதியில் எனக்குப் புகைப்படமே அதிகம். ஆண்டவன் புண்ணியத்தில் ஏதோ ஓடிக்கொண்டு இருக்கிறது என் பிழைப்பு. வீடியோ டிவியில் வருவதெல்லாம் கனவிலும் நினைக்கக்கூடாத காரியம் ஒய்வுபெறும் முன்பாக. ஆனால் அவருக்கு பேலியோவின் அடிப்படை, செயல்முறை பற்றி அரை மணிநேரம் கூறினேன். எல்லாம் நண்பர்கள் வழியாகவும் அனுபவரீதியாகவும் தெரிந்துகொண்டவைதாம். தெளிவாகவும் எளிமையாகவும் எழுதிவைத்தால் என்ன என்றுதான் தோன்றுகிறது. 
இப்படியே, எடுத்ததையெல்லாம் எழுதிக்கொண்டே போகத் தொடங்கினால் இந்த டிசம்பருக்குள்ளாகவே ஏழெட்டு புத்தகங்கள் ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது. 
இப்போதைக்கு செயல் சாத்தியமுள்ள திட்டத்தைப் பட்டியலிட்டு இருக்கிறேன்.
இபுத்தகங்கள் 
1. அறியாத முகங்கள் 
2. முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் 
3. உயிர்த்தெழுதல் 
4. சோழிகள் 
5. விமலாதித்த மாமல்லன் கதைகள் 
இபுத்தகம் மற்றும் அச்சில் (டிஜிட்டல் பிரிண்டிங் 100 பிரதிகள்) 
1. விமலாதித்த மாமல்லன் கதைகள் 
2. எழுத்துக் கலை (இணைய கட்டுரைகள்)
3. சிகரமா தகரமா – ஜெயமோகனின் படைப்புகள் 
இவையனைத்தும் சத்ரபதி வெளியீடாக
1. புனைவு என்னும் புதிர் – தி இந்து கட்டுரைகள் வேறொரு பத்திப்பகம் மூலமாக. 
பெருமாள்முருகன் நோபல் பரிசு வாங்குவதற்கும் என்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. 
இன்ஷால்லா