முக்கிய கதாபாத்திரங்கள்
வெங்கட் சாமிநாதன்: தமிழ் நவீன இலக்கியத்தின் தலையாய விமர்சகர். இவருக்கு 2004ஆம் ஆண்டு, வாழ்நாள் பங்களிப்புக்காக கனடா நாட்டிலிருந்து இயல் விருது வழங்கபடுகிறது.
சுந்தர ராமசாமி: தமிழ் நவீன இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை நாவல் கவிதை விமர்சனம் என்று பன்முக ஆளுமை கொண்டவர்.
காலச்சுவடு: தற்காலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடைநிலை பத்திரிகை.
கண்ணன்: காலச்சுவடு பத்திரிகையின் என்.டி. சுந்தர ராமசாமியின் மகன்.
நுஃமான்: இலங்கை எழுத்தாளர்
வெசா – சுரா மோதல்: பின்னணி
வெங்கட் சாமிநாதன் சுந்தர ராமசாமி இருவரும் தமிழின் முக்கியமான இலக்கிய முகங்கள். நெடுநாளைய நண்பர்கள். வெங்கட் சாமிநாதன் சமரசமற்ற விமர்சனத்துக்கும் கடுமையான மொழியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கும் பெயர்பெற்றவர். சுந்தர ராமசாமி தர்க்கபூர்வமான வாதங்களுக்கும் மொழி வீச்சிற்கும் பெயர்பெற்றவர். இருவருமே, சிறுபத்திரிகை வட்டத்துக்குள் எண்ணிறைந்த வாசகர்களை விசிறிகளாகக் கொண்டவர்கள். இருவருமே முதியவர்கள். இருவருமே இன்று நம்மிடையே இல்லை.
2004ஆம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்கு கண்டா நாட்டிலிருந்து இயல் விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுக்க வெங்கட் சாமிநாதன் எந்த விருதுமே வாங்கியவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தெரியவந்ததுமே, சுந்தர ராமசாமியும் அவரது துணைவியாரும் நாகர்கோவிலிலிருந்து, சென்னையிலிருக்கும் வெங்கட் சாமிநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
விருது வாங்கிக்கொண்டு வந்தபிறகு, காலச்சுவடு இதழில், வெங்கட் சாமிநாதன் இயல் விருது வாங்கத் தகுதியானவரில்லை என்கிற நுஃமானின் கடிதம் பெட்டிச் செய்தியாக வெளியாகிறது.
சுந்தர ராமசாமி தனிப்பட வாழ்த்திவிட்டு, அவர் தொடங்கிய, அவர் மகன் நடத்தும் பத்திரிகையிலேயே இப்படி ஒரு செய்தியும் வெளிவருவதை வெங்கட் சாமிநாதனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர் கொந்தளித்து, அமுதசுரபி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதைத் திண்ணை இதழில் வெளியிடவும் செய்கிறார்.
இதற்கு மறுப்பாக சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
இதற்கு எதிர்வினையாக வெங்கட்சாமிநாதன் தமது தரப்பை முன்வைத்து ஒரு கட்டுரையை வெளியிடுகிறார்.
வெங்கட் சாமிநாதன் எழுதிய முதல் கட்டுரைக்கு சுந்தர ராமசாமி மறுப்பு எழுதிய பின்பும், காலச்சுவடு மற்றும் தம் தந்தை சுந்தர ராமசாமியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கிவிட்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கோரும்படியும் இல்லையேல் இபிகோ பிரிவு 500ன் கீழ் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் காலச்சுவடு கண்ணன், வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.
தமது தள்ளாத வயதில் வழக்காட அலைய முடியாது என்பதாலும் இலக்கிய பிரச்சனைக்கு, சட்டரீதியாகத் தம்மால் போராட முடியாது என்றும் அதனால் மன்னிப்புக் கேட்பதாகவும் வக்கீல் நோட்டீஸுக்கு பதில் கூறுகிறார் வெங்கட் சாமிநாதன்.
இவையனைத்தும் திண்ணை இணைய இதழில் இருக்கின்றன.
வெசா – சுரா மோதல்: கண்ணன் விட்ட வக்கீல் நோட்டீஸ் pdf வடிவில்
அமேஸான் eBookகாக வாங்க
https://www.amazon.nl/dp/B07C1T7SW1
https://www.amazon.com.br/dp/BB07C1T7SW1