April 24, 2018

எதிர்ப்பு என்கிற பெயரால் கும்பலில் சேராதீர்கள். கும்பலைச் சேர்க்காதீர்கள்

எவனோ ஒருவன், சாகஸக் கோளாறிலோ, சகுனியாகவோ விட்டெறிகிற கல், இறுதியில் உங்கள் எல்லோர்மீதும் திரும்பிவந்து விழும்.

கல் மட்டுமன்று, கமெண்ட்டுகளும் இப்படித்தான்

எனக்கு சம்மந்தமேயில்லாத ஒரு நாய், ட்விட்டரில் போட்ட கமெண்ட்டின் – போட்ட உடனே கண்டிக்கப்பட்ட, கண்டிக்கப்பட்ட உடனே நீக்கப்பட்டுவிட்ட அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்துக்கொண்டுதான் போலீசுக்குப் போனார் ஓலா ஆண்ட்டி. வன்மம் துளியுமற்ற நேர்மையின் மறு அவதாரம் அவர். கும்பல் சேர்த்து என்னைத் தாக்கும்படி தூண்டிவிடுகிறான் இந்த அரசு ஊழியன் இதோ பாருங்கள் ஆதாரம் என்கிற அதே அரதப் பழைய சின்மயி டெக்னிக்கை அடியொற்றி.

ஆனால் அதே ஆண்ட்டி இன்று பத்திரிகையாளர்கள் கல்லெறிந்தது வன்முறையல்ல என்கிறார்

அவதூறு கமெண்ட் இட்ட, யாரென்றே தெரியாத அவனை அப்போதே பிளாக் செய்துவிட்டேன் என்றுதான் போலீசில் எழுதிக்கொடுத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் RTI போட்டு கேட்டு வாங்கிப் பாருங்கள். 

இன்றுவரை அவதூறு செய்த அவனைப் பற்றி ஒரு வார்த்தையாவது புகாராய் கூறினாரா இந்த ஓலா ஆண்ட்டி. இல்லை. அதற்கு எளிய காரணம் அவருடைய இலக்கு, அவனல்ல நான் என்பதுதானே.

இன்று பாருங்கள் இதே ஆண்ட்டி ஒரிஜினல் போஸ்ட் போட்ட திருமலை சா என்பவனையும் கைது செய் என்கிறார். இப்போது மாட்டியிருப்பது மாமல்லன் அல்ல S. Ve. சேகர் என்பதைத் தவிர வேறென்ன காரணமாக இருக்கக்கூடும்.

பேமஸாவதற்காக பேஸ்புக்கில் பொங்கும் இரட்டை நாக்கு ஆண்ட்டிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள்‬.