August 16, 2018

பிற்சேர்க்கை:

நேற்றிரவு, பேஸ்புக் மெசஞ்சரில் எனக்கும் லண்டனில் வசிக்கும் இலக்கியப் பரிச்சயமற்ற, இருபது இருபத்துமூன்று வயதுடைய ஈழ இளைஞர் ஒருவக்கும் இடையில் நடந்த உரையாடல் பின்வருமாறு.

ஷோபாசக்தி கதை ஏதாச்சும் படிச்சிருக்கீரா 

இல்ல. எனக்கு ஷோபா பிடிக்காது. இல்லாத விசயத்த இருக்கிறா மாதிரி பொய் சொல்லும் அந்த ஆள்

கதை படிக்கிற பழக்கம் உண்டா 

இதுவர எந்த ஸ்டோரியும் படிச்சு இல்ல சேர். அதெல்லாம் ஸ்கூல் லைஃபோட போச்சு

மாதா கதையின் சுட்டியைக் கொடுத்தேன்.

படிச்சிப் பாரும். இவன் மாஸ்டர் 

ப்ரெண்ட் ஒருத்தன் கொரில்லா படிக்க சொன்னவன்

சிறுகதைகள்ல இவன் பெரிய கை. 

ம்ம் படிச்சு பார்க்குறன்

நேத்து நைட் ஆரம்பிச்சு விடியகாத்தால மூணாவது கட்டுரையையும் எழுதி முடிச்சிட்டேன். இன்னும் ஒரு  கொதி விட்டு இறக்கினா போதும்.

அப்போ நாளைக்கு வேலை போகலையா

இந்த மூணாவது கட்டுரைக்கான கதையைத்தான் முதலில் உமக்குக் குடுக்க ‘நினைத்தினம்’ அது நெட்டில் கிடைக்கேல்ல.  அந்தக் கதையின் பெயர் சூக்குமம் 

உங்க ப்ளாக்ல போட்டுட்டீங்களா

இல்லை. காலம் இதழுக்கு இப்போதான் அனுப்பிவிட்டு கனடா செல்வத்திடம் இப்பதான் பேசினேன் என்று கூறிவிட்டு சூக்குமம் கதையை மொபைலில் போட்டோ எடுத்து, பேஸ்புக் மெசஞ்சரிலேயே இந்த இளைஞருக்கு அனுப்பினேன். 

படித்துவிட்டு அவர் அனுப்பிய மறுமொழி இது 

1st time ஒரு கதை படிச்சன் உங்க புண்ணியத்துல. இன்னில இருந்து நான் இப்படி நல்ல கதை நீங்க தந்தா படிக்கிறன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். கதை முழுக்க யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில இருக்கே. என்னால இலகுவில் விளங்கிக்கொள்ள முடிஞ்சது. உங்களால tamil டிக்சனரி இல்லாம இந்தக் கதைய விளங்க முடியாது எண்டுறது என்னோட ஊகம். ஒரு பக்கத்த எடுத்தாலே அதுல முக்காவாசி நம்ம பேச்சுவழக்குதான். நீங்க எப்புடி விளங்குனீங்க. 

அதெல்லாம் புரியும். இலக்கியம் தெரியும்ங்கறதால. உமக்கு எப்படி இருந்துது. அதச்சொல்லும்.

நல்லா இருந்த. ஷோபாட வேற நல்ல கதை போட்டுவிடுங்க.

எதையுமே படிக்காது எல்லாவற்றைப்பற்றியும் கருத்துகளை உருவாக்கிக்கொண்டு திரியும் இளைஞர்களிடம் நம்மால் செய்யக்கூடியது இவ்வளவுதான். 

பின்குறிப்பு: இதை ஒரு கட்டுரையின் பிற்சேர்க்கையாக ஒரு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். அவர் இது வேண்டாமே என்றார். அவர் இணையத்தில் இருப்பவரில்லை. எனவே அவருக்கு இதன் முக்கியத்துவம் புரியவில்லை. ஒன்றும் பிரச்சனையில்லை கட்டுரையை மட்டும் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். என்ன சொல்கிறீர்கள். நம்மால் செய்யக்கூடியது இவ்வளவுதான் இல்லையா.