September 9, 2018

சில தினங்களுக்கு முன், இரவு 7:30 வாக்கில், இப்போது பிரான்சில் நேரம் என்னவிருக்கும் என்று மொபைலில் பார்த்தேன். மாலை 4:00 என்று காட்டிற்று.

பேசலாமா என்று மெசஞ்சரில் ஷோபாசக்திக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

பேசலாம் என்று பதில்‬ வந்தது.

புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தி கதைகள்) புத்தகத்தைக் கிழக்குல குடுக்கலாம்னு இருக்கேன்.

தாராளமா குடுங்க. அது ‘உங்க’ புத்தகம்ணே.

புக்ஃபேர்ல இப்படி எழுதலாம்னு இருக்கேன்னு சொன்னபோது, கருப்புப் பிரதிகள்லையே போடலாம்னு நீங்க சொன்னீங்க.

ஆமாம்.

கருப்புப் பிரதிகள்ல அவங்களுக்கெல்லாம் என்னைப் பிடிக்காது…

அப்படி…

இல்லை. எனக்கும் பிடிக்காது.

எப்படியும் யார் வெளியிட்டாலும் ஒரு மாசத்துல நீங்க சண்டை போட்டுக்கப்போறீங்க…

ஹாஹ்ஹாஹ்ஹா. என் கட்டுரைகளாக இருந்தாலும் புத்தகத்துல உங்கக் கதைகளும் இருக்கும்போது உங்ககிட்ட அனுமதி கேக்கறதுதானே முறை. 

காலச்சுவடுல போடறதுக்கே அனுமதி குடுத்தேனே. 

இல்லே கிழக்குல உங்கக் கதைகள் வரதுக்கு… 

காலச்சுவடுக்குக் கிழக்கு ஆயிரம் மடங்கு மேல்.

ரொம்ப நன்றி. மெய்ல் அனுப்பறேன்.

‘உங்களுக்கு’ அனுமதி தரேன்.