1960ல் சென்னையில் பிறந்தவர். தமது 21ஆவது வயதில் கணையாழியில் வெளியான இலை சிறுகதை, பெரியவர்கள் குறுநாவல் ஆகியவற்றின் வழி இலக்கிய உலகின் பரவலான கவனத்தை ஈர்த்தவர். 1994 முதல் பதினாறு வருடங்கள் இலக்கிய உலகுடன் தொடர்பற்று இருந்தவர். 2010லிருந்து, படைப்பு, விமர்சனம், அநீதிக்கு எதிரான குரல் என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார், மூன்று கதைத் தொகுதிகளும் ஒரு முழு தொகுப்பும் வெளியாகி உள்ளன.

விமலாதித்த மாமல்லனின் கதைகள் இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

நூல்கள் 

விமலாதித்த மாமல்லன் கதைகள் 
சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் 
புனைவு என்னும் புதிர் 
தவிப்பு – சிறுகதைத் தொகுப்பு
புனைவு என்னும் புதிர் – ஷோபாசக்தியின் 12 கதைகள்